ட்ரம்பின் குடிவரவு கட்டுப்பாடுகளால் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி நெருக்கடி!

ட்ரம்பின் குடிவரவு கட்டுப்பாடுகளால் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி நெருக்கடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா மற்றும் குடிவரவு கட்டுப்பாடுகளால், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேசக் கல்வி நிறுவனம் (IIE) வெளியிட்ட ஆய்வின்படி, புதிய வெளிநாட்டு மாணவர் சேர்க்கை 15 சதவீதத்தால் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த வீழ்ச்சி 18 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு 2.4 பில்லியன் டொலர் இழப்பும், சுமார் 31,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதாக NAFSA அமைப்பு தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை குறைவால் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இதற்கிடையில், கடுமையான குடிவரவு கொள்கைகள் காரணமாக உலகளாவிய திறமையாளர்கள் பிற நாடுகளின் கல்வி நிறுவனங்களை நாடக்கூடும் எனப் பல்கலைக்கழக நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin