பெற்றோலியக் கூட்டுத்தாபன மோசடி குற்றச்சாட்டு – தொழிற்சங்க செயற்பாட்டாளர் கைது
தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த இன்று (16) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

