சைபர் மோசடிக் கும்பல்களைப் பிடிக்க இலங்கை வருகிறது அமெரிக்க FBI விசேட குழு!

சைபர் மோசடிக் கும்பல்களைப் பிடிக்க இலங்கை வருகிறது அமெரிக்க FBI விசேட குழு!

இலங்கையில் இடம்பெறுவதாகச் சந்தேகிக்கப்படும் சைபர் மோசடிகளை முறியடிப்பதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகமான FBI இன் விசேட குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, FBI இன் சார்லட் கள அலுவலகத்தைச் சேர்ந்த இந்தக் குழு நவம்பர் 16 முதல் 22ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருந்து இலங்கை சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

இதன்போது சைபர் மோசடி மையங்கள் தொடர்பான விசாரணைகள், டிஜிட்டல் தடயவியல் மற்றும் விசாரணை நுட்பங்கள் தொடர்பில் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தக் கூட்டு நடவடிக்கை மூலம் சர்வதேச சைபர் குற்ற வலையமைப்புகளைத் தடுத்து, இலங்கையர்கள் மற்றும் அமெரிக்கப் பிரஜைகள் மோசடிகளுக்கு இரையாகுவதைத் தடுக்க முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin