வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களுக்கான வீட்டுத்திட்டம் 2027இல் ஆரம்பம்!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களுக்கான வீட்டுத்திட்டம் 2027இல் ஆரம்பம்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு மற்றும் ஊழியர் நல வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதற்கமைய, வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான வீட்டுத்திட்டத்தை 2027ஆம் ஆண்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களில் விடுதி வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி வளாகத்தில் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகச் சமூகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே இத்திட்டங்களின் நோக்கமாகும்.

Recommended For You

About the Author: admin