பயணிகளைப் பயமுறுத்தி பணம் சம்பாதித்த சீனாவின் ‘Ghost Drivers’!
2016ஆம் ஆண்டு சீனாவில் Uber செயலியில் ஒரு வித்தியாசமான மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
சில Uber ஓட்டுநர்கள் தங்களுடைய புரொஃபைல் புகைப்படங்களாக பயமுறுத்தும் வகையிலான பேய் போன்ற முகங்களைப் பயன்படுத்தினர்.
இதைப் பார்த்த பயணிகள் அச்சமடைந்து தங்களது பயணத்தை ரத்து செய்தனர்.
இதுதான் அந்த ஓட்டுநர்களின் திட்டம்! பயணிகள் முன்பதிவை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்தை ஓட்டுநர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனால் பயணிகளை ஏற்றிச் செல்லாமலேயே பணம் சம்பாதிக்கும் மோசடி நடைபெற்றது.
சிலர் பயணிகள் ரத்து செய்யாவிட்டாலும், அவர்கள் வாகனத்தில் ஏறிவிட்டதாகச் செயலியில் பதிவு செய்து பயணத்தை முடித்ததாகக் காட்டி கட்டணம் வசூலித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட சீனாவின் பல நகரங்களில் இந்தப் புகார்கள் பதிவாகின.
இதையடுத்து Uber மோசடியில் ஈடுபட்ட கணக்குகளை முடக்கியதுடன், பாதிக்கப்பட்ட பயனர்களுக்குப் பணத்தைத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்தது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய இந்த வித்தியாசமான மோசடி 2016ஆம் ஆண்டில் உலகளவில் கவனம் பெற்றது.

