“துணிச்சலான ஈரானிய மக்களின் தைரியம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது!”

“துணிச்சலான ஈரானிய மக்களின் தைரியம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது!” – புகழ்ந்து பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின்!

ஈரான் மக்கள் வெளிப்படுத்தி வரும் துணிச்சல், வீர உணர்வு மற்றும் மன உறுதி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் திகதி மொஸ்கோவில் நடைபெற்ற 23ஆவது வால்டாய் சர்வதேச கலந்துரையாடல் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஈரானைச் சுற்றி இடம்பெற்று வரும் சம்பவங்களை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஈரானிய மக்களின் துணிச்சலும் வீரமும் மன உறுதியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானின் அரச நிர்வாகம், ஆயுதப் படைகள் மற்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் நாட்டுக்காகத் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய மக்களின் மன உறுதியைப் பாராட்டி புடின் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: admin