ஈரானை தாக்க… இனி ஈராக்கில் இடம் தர மாட்டோம்…!

ஈரானை தாக்க… இனி ஈராக்கில் இடம் தர மாட்டோம்…!

ஈராக் பிரதமர் அதிரடி அறிவிப்பு!

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈராக் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நவம்பர் 5ஆம் திகதி தொலைபேசி வாயிலாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஈராக் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும், ஈராக்கின் நிலப்பரப்பு எந்தவொரு அண்டை நாட்டின் மீதான தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிக்க இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதியான தீர்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக் வெளியுறவு அமைச்சர் ஃபுவாத் ஹுசைனும், மீண்டும் ஒரு போருக்குள் ஈராக் இழுக்கப்படுவது நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுடனும் அண்டை நாடான ஈரானுடனும் நல்லுறவைப் பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ள ஈராக், தற்போதைய மோதலில் நேரடித் தரப்பாக இருக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் இராணுவ மோதல் ஏற்படக்கூடும் என்ற சூழலில், ஈராக்கின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: admin