சுவிட்சர்லாந்தில் கடும் வெப்ப அலை! மே முதல் ஆகஸ்ட் வரை 1,257 பேர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் கடும் வெப்ப அலை! மே முதல் ஆகஸ்ட் வரை 1,257 பேர் உயிரிழப்பு!

2026ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை காரணமாக, சுவிட்சர்லாந்தில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 1,257 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிஸ் வெப்பமண்டல மற்றும் பொது சுகாதார நிறுவனம் (Swiss TPH) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றிலேயே அதிக வெப்பம் நிலவிய கோடைகாலமாக அமைந்துள்ளது. 2003ஆம் ஆண்டின் கடுமையான வெப்பத்தையும் இது மிஞ்சியுள்ளது.

இந்த வெப்பத்தால் உயிரிழந்தவர்களில் சுமார் 85 சதவீதமானோர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் பதிவான மொத்த உயிரிழப்புகளில் 5.5 சதவீதம் வெப்பத்துடன் தொடர்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை அதிக வெப்பம் நிலவிய நாட்களுடன் தொடர்புடையவை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், முதியவர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்த எண்ணிக்கை ஆரம்பகட்ட மதிப்பீடாகும். இறுதியான புள்ளிவிபரங்களும் விரிவான ஆய்வறிக்கையும் 2027ஆம் ஆண்டு வசந்த காலத்தில் வெளியிடப்படவுள்ளன.

Recommended For You

About the Author: admin