அமெரிக்காவின் MV-22B ஒஸ்ப்ரே விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை!
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MV-22B ரக ஒஸ்ப்ரே (Osprey) விமானம் இன்று (07) நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமானத்தின் விசேட அம்சமாக, இதனை ஹெலிகொப்டராகவும் விமானமாகவும் பயன்படுத்த முடியும்.
இதன் இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள சுழல் விசிறிகள் (Rotor Blades), ஹெலிகொப்டரைப் போன்று மேல்நோக்கி அமைந்திருக்கும். தேவைக்கேற்ப அவற்றை முன்னோக்கித் திருப்பி, சாதாரண விமானத்தைப் போன்று வேகமாகப் பறக்கச் செய்ய முடியும்.
மேலும், இந்த விமானம் புறப்படுவதற்கு ஓடுபாதை அவசியமில்லை. ஹெலிகொப்டரைப் போன்று ஒரே இடத்திலிருந்து செங்குத்தாக மேலெழும்ப முடியும்.
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்குத் தெற்கே சுமார் 50 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பலிலிருந்து புறப்பட்டு இந்த விமானம் கட்டுநாயக்க வந்துள்ளது.
இன்று பிற்பகல் மீண்டும் குறித்த கடற்படைக் கப்பலுக்குத் திரும்பிச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது அமெரிக்க மரைன் படையினரால் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.


