போதைப்பொருட்கள் பொதிகளை ஏற்றிச் சென்ற படகொன்றை கைப்பற்றிய கடற்படையினர்!
இலங்கைக்கு தெற்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டது.
குறித்த பலநாள் மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருப்பதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் வழங்க இலங்கை கடற்படை எதிர்பார்த்துள்ளது.

