208 பொலிஸ் அதிகாரிகள் கைது.. 1,500 பொலிஸ் அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தம்

போதைப்பொருள் தொடர்பான பல குற்றங்களில் 208 பொலிஸ் அதிகாரிகள் கைது.. 1,500 பொலிஸ் அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தம் – உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு.!

இலங்கையில் போ**தைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை 208 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

 

இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பல்வேறு தவறுகள் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

பொலிஸாருக்குள் தகுதியற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அவர்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்கும், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin