இலங்கை சென்று கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 3 பயணிகள்!

இலங்கை சென்று கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 3 பயணிகள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணம் செய்த விமானத்தில் குழப்பம் ஏற்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த மூன்று பயணிகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் விமானப் பயணத்தின் போது மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் 3 பயணிகளும் இடையூறு விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமான பணியாளர்களுடன் முறுகல் பொலிஸ் விசாரணைகளுக்கமைய, பயணத்தின் போது உணவு பரிமாறுவது தொடர்பாக விமானப் பணிக்குழுவினருடன் சந்தேகநபர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதலின் போது, அவர்கள் உணவு தள்ளுவண்டியை தள்ளி விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

எனினும், விமானத்தின் நுழைவாயிலுக்கு பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin