தென் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்: மீன்பிடிப் படகு கடற்படையினரால் இடைமறிப்பு!
இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பெருமளவிலான மூடைகளை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகொன்றை இலங்கைக் கடற்படை இடைமறித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகக் கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கை தொடர்பான மேலதிக விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனக் கடற்படை தெரிவித்துள்ளது.

