பிரான்ஸில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்!
34 இலட்சத்தைக் கடந்த வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை!
பிரான்ஸில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் மீண்டும் அதிகரித்து வருவதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
France Travail அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முழுமையாக வேலையில்லாதவர்களின் (Category A) எண்ணிக்கை 0.9% உயர்ந்துள்ளது.
இதன் மூலம் பிரான்ஸில் வேலையின்றித் தவிக்கும் ‘Category A’ பிரிவைச் சேர்ந்த வேலை தேடுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3.35 மில்லியனாக (33.5 லட்சம்) அதிகரித்துள்ளது.
பகுதிநேர வேலை செய்வோரையும் சேர்த்துப் பார்க்கும்போது, வேலை தேடும் பிரான்ஸ் மக்களின் மொத்த எண்ணிக்கை 5.85 மில்லியனாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை நிலவரம் மிகவும் மோசமடைந்து வருகிறது.
15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 21.6% என்ற கவலையளிக்கும் நிலையை எட்டியுள்ளது.
சமூக நல உதவிகளைப் பெறும் RSA பயனாளிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
25 முதல் 49 வயதுடைய மத்திய பிரிவினரின் வேலையின்மை விகிதமும் கடந்த காலாண்டை விட 1% உயர்ந்துள்ளது.
அதேவேளை, 50 வயதைக் கடந்த மூத்த வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் 0.1% சிறிய வீழ்ச்சி தென்படுவது மட்டுமே ஒரே ஆறுதலான செய்தியாகும்.
பிரான்ஸின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி முடங்கியுள்ளதே இந்த வேலைவாய்ப்பின்மை உயர்விற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

