பிரான்ஸ் அதிபருக்கு கத்தாரில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், கத்தாருக்கு அரசுமுறை விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை லுசைல் அரண்மனையில் நடைபெற்றது.
கத்தாரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பிரான்ஸ் அதிபருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் இராணுவத் துறை சார்ந்த உத்திசார் பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், பிராந்தியத்தின் தற்போதைய முக்கிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் தனியாரீதியில் கலந்தாலோசித்தனர். பிரான்ஸ் அதிபர் ஒருவர் கத்தாருக்கு மேற்கொண்ட முதலாவது அரசுமுறை விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


