நிதி இல்லை கிளிநொச்சி நாய்கள் சரணாலயம் மூடப்படுகின்றது

போதிய நிதி இன்மையால் கிளிநொச்சி – பனை பிரதேசத்தில் இயங்கி வந்த நாய்கள் சரணாலயத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இந்த சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து வருடங்களாக நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

வாழைத்தோட்டத்தில் அரங்கேறிய படுகொலை : புதிய தகவல்

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதன‍ை தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மேலும் நீடிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதிவரையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. “தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக... Read more »

தலைவரானால் தமிழர்களின் உரிமைக்காக பாடுபடுவேன்: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தான் தெரிவுசெய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாகவும் அதேவேளை, கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்சித் தலைவரை தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பது சிறந்தது எனவும்... Read more »

2016 இல் காணாமல் போன இந்திய விமானப்படை விமானம்: சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

வங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் காணாமல் போன போது அதில் 29 பணியாளர்கள் இருந்ததாக இந்திய ஊடகங்கள்... Read more »

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் ஜனாதிபதிக்கு ஆதரவு: சம்பந்தன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை தைப்பொங்கலுக்கு முன்னர் நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்க தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுளார்.... Read more »

டெல்லியை வாட்டும் கடும் குளிர்

இந்திய தலைநகர் டெல்லியில் இந்தப் பருவத்தின் மிகவும் குளிரான காலை என இன்று வெள்ளிக்கிழமை காலை (ஜனவரி 12) பதிவானது. டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. கடும் பனியால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் கடும் குளிா்,... Read more »

மருந்துக் கொள்வனவில் ஊழல் கெஹெலியவுக்கு எதிராக சிஜடியில் முறைப்பாடு

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களில் ஊழல்கள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த... Read more »

ஐரோப்பாவில் உற்பத்தியை நிறுத்தும் டெஸ்லா

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து விநியோக சங்கிலி சீர்குலைந்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனம் தனது ஒரே ஐரோப்பிய மின்சாரக் கார் தொழிற்சாலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளது. செங்கடல் வழியேயான போக்குவரத்தை கப்பல் நிறுவனங்கள் தவிர்ப்பதால், நீண்ட விநியோக... Read more »

சடுதியாக அதிகரித்த எண்ணெய் விலை

செங்கடலில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சற்று முன்னர் வரை ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.16 அமெரிக்க டொலர்களாக அதிகரித்து அல்லது 4.1 சதவீதம் உயர்ந்து... Read more »