போதிய நிதி இன்மையால் கிளிநொச்சி – பனை பிரதேசத்தில் இயங்கி வந்த நாய்கள் சரணாலயத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து வருடங்களாக நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாய்களுக்கு போதிய சுகாதார வசதிகள் மற்றும் உணவு வழங்க முடியாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாய்கள் சரணாலயத்தை நடத்துவதற்கு தேவையான நிதியுதவி கிடைத்தவுடன் அதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அதுவரை நாய்களை அப்பகுதிக்கு கொண்டு வரவேண்டாம் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.