கனடாவில் ஈழத் தமிழ் போதை கடத்தல் கும்பல் கைது!!

கனடாவில் ஈழத் தமிழ் போதை கடத்தல் கும்பல் கைது!!

கனடாவில் அமேரிக்க பாதுகாப்பு படைகளுடன் இணைந்து தேடுதல் நடாத்தி துப்பாக்கிகள்,

போதைப்பொருட்களுடன் பிடிக்கப்பட்ட யுவதி உட்பட 4 இலங்கைத் தமிழ் இளசுகள்! கனடாவிலும் கலாட்டாவா?

கனடாவின் ரொறன்டோவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட யுவதி கனடாவில் உட்பட நான்கு இலங்கைத் தமிழர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ரொறன்டோ பெரும்பாகப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மிகப்பெரிய சட்டவிரோத துப்பாக்கி கடத்தல் கும்பல் ஒன்றை பீல் பிராந்திய பொலிஸார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.

 

14 வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த வலையமைப்பை வீழ்த்த, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையுடன் சேர்ந்து பீல் பிராந்திய பொலிஸார் ரகசிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

 

கடந்த 2023 அக்டோபர் முதல் ஜூலை வரை நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில், 23 சட்டவிரோத துப்பாக்கிகள்,

 

950-க்கும் மேற்பட்ட ரவைகள் மற்றும் 820 கிராம் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

மிசிசாகா, ஸ்கார்புரோ மற்றும் அஜாக்ஸ் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்திய பொலிஸார் நான்கு பேரைக் கைது செய்தனர்.

 

ஸ்கார்புரோவைச் சேர்ந்த 24 வயதான ஸ்டீபன் பிரகாஷ்

, ரொறன்டோவைச் சேர்ந்த 23 வயதான ஜனோதன் தயாபரன், ஜாக்ஸைச் சேர்ந்த 24 வயதான அக்சயா ஸ்ரீகாந்தன்

,மிசிசாகாவைச் சேர்ந்த 28 வயதுடைய நபர்

 

இவர்கள் மீது துப்பாக்கி கடத்தல், பிணை நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக 57 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 

கைப்பற்றப்பட்ட ஒரு துப்பாக்கி கடந்த 2020 மார்ச் மாதம் மிசிசாகாவில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்குடன் நேரடியாக தொடர்புடையது என்பது தெரியவந்துள்ளது.

 

மேலும், கைப்பற்றப்பட்ட 23 துப்பாக்கிகளில் 15 துப்பாக்கிகள் அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவை.

 

பீல் பிராந்தியத்தில் பிடிபடும் 90 சதவீத சட்டவிரோத துப்பாக்கிகள் அமெரிக்க எல்லையிலிருந்தே லொரி போக்குவரத்து மற்றும் பியர்சன் விமான நிலையம் வழியாக கடத்தி வரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் அதிபர் நிக் மிலினோவிச் (Nick Milinovich), “இவை வெறும் துப்பாக்கிகள் அல்ல, கப்பம் கோருதல்,

 

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தல் மற்றும் வாகனக் கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்படும் வன்முறைக் கருவிகள்” என எச்சரித்தார்.

 

பிராம்டன் மேயர் பெட்ரிக் பிரவுன் (Patrick Brown), பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற துணிச்சலாகச் செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

இவ்வருடத்தில் இதுவரை 125 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறிய பொலிஸார், குற்றக் கும்பல்களுக்கு எதிரான தமது அதிரடி தொடரும் எனக் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin