பாரிஸின் Eiffel கோபுரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடிப் பதவி விலகல்!

பாரிஸின் Eiffel கோபுரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடிப் பதவி விலகல்!

பெண் ஊழியர்களை வெளியேற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

பாரிஸின் Eiffel கோபுரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சமயம் சார்ந்த நிகழ்வு ஒன்றில் பெண் ஊழியர்களைப் பணியிலிருந்து வெளியேறுமாறு கூறிய விவகாரத்தைத் தொடர்ந்து

 

தனது பதவியிலிருந்து விலகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றம் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று நிர்வாகத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

 

சமயக் குழுவினர் இம்மாதம் Eiffel கோபுரத்திற்குப் பார்வையிடச் சென்றபோது இந்தச் சர்ச்சை வெடித்தது.

 

அந்தச் சமயக் குழுவினரின் வருகையையொட்டி, அங்கிருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் திடீரென வெளியேற்றப்பட்டு,

 

அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்கள் மட்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

 

நிர்வாகத்தின் இந்த ஒருபக்க முடிவைக் கடுமையாக எதிர்த்துப் பெண் ஊழியர்களும் சக ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால்,

 

வரலாற்றுச் சிறப்புமிக்க Eiffel கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோபுரத்தின் நிர்வாக நிறுவனமான SETE தீவிர விசாரணை ஒன்றை நடத்தி,

 

பெண் ஊழியர்களை வெளியேற்றியது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு என்று பகிரங்கமாகத் கண்டனம் தெரிவித்தது.

 

பணியிடத்திலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டமை தமக்கு மிகுந்த அவமானத்தையும் மனவேதனையும அளித்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

 

பிரெஞ்சு அரசியல்வாதிகள் பலரும் இந்தச் சம்பவத்திற்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில்,

 

சம்பந்தப்பட்ட சமயக் குழுவினரும் பொதுவெளியில் தங்களது மன்னிப்பைக் கோரினர்.

 

ஐரோப்பிய நாடுகளின் கடுமையான வேலைவாய்ப்பு நெறிமுறைகள் மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரான இந்தச் செயல் பாரிஸ் நகரில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

தற்போது சர்ச்சையின் மையமாக இருந்த தலைமை நிர்வாக அதிகாரியின் விலகல் அறிவிப்பு மூலம், Eiffel கோபுர நிர்வாகம் இந்தச் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளது.

Recommended For You

About the Author: admin