அமெரிக்காவின் முதல் கறுப்பின சபாநாயகராகும் வாய்ப்பு!

வரலாறு படைக்கத் தயாராகும் ஹக்கீம் ஜெஃப்ரிஸ்! அமெரிக்காவின் முதல் கறுப்பின சபாநாயகராகும் வாய்ப்பு!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நியூயோர்க் மாநிலத்தின் 8ஆவது காங்கிரஸ் மாவட்டத்தில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் (Hakeem Jeffries) வெற்றிபெற்றுள்ளார்.

56 வயதான ஹக்கீம் ஜெஃப்ரிஸ், 2013ஆம் ஆண்டு முதல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.

 

இந்நிலையில், 2027 ஜனவரியில் புதிய காங்கிரஸ் கூடும்போது, பிரதிநிதிகள் சபையின் அடுத்த சபாநாயகராக ஹக்கீம் ஜெஃப்ரிஸ் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

அவ்வாறு அவர் தெரிவு செய்யப்பட்டால், அமெரிக்காவின் சுமார் 250 ஆண்டுகால வரலாற்றில் பிரதிநிதிகள் சபையின் முதல் கறுப்பின சபாநாயகர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.

 

அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு அடுத்ததாக அதிகார வரிசையில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் முக்கிய இடத்தைப் பெறுகிறார்.

 

எனினும், சபாநாயகர் பதவிக்கான இறுதித் தெரிவு புதிய பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பின் மூலமே உறுதிப்படுத்தப்படும்.

 

ஹக்கீம் ஜெஃப்ரிஸின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியலில் அவரது அடுத்தகட்ட நகர்வுகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.

Recommended For You

About the Author: admin