ஜோர்டானில் இலங்கைத் தூதரகம் முன்பாக பயங்கரவாதத் தாக்குதல்! பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு – இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிப்பு!
ஜோர்டானின் அம்மான் நகரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில், தனது உத்தியோகபூர்வ கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜோர்டான் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜோர்டானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும், அங்கு வசிக்கும் இலங்கைப் பிரஜைகளும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாக அம்மானிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது

