கடும் மழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு: நாவலப்பிட்டியில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின!
கடும் மழை மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை காரணமாக நாவலப்பிட்டிய பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல வீடுகள் இன்றைய தினம் (20) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கித்துல்கொட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தர ஓவிட்ட உள்ளிட்ட பகுதிகளே வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

