இந்திய சுற்றுலாப் பயணிகளின் வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா புகையிரத பாலத்திற்கு அருகில் இன்று (19) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 37 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

 

விபத்தில் பலத்த காயமடைந்த நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளோட்டியான பெண், நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

வேன் சாரதியின் கவனயீனமான முறைமையற்ற பயணமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin