பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்வு!

பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்வு!

ஹோர்முஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ளமை மற்றும் சவுதி அரேபியாவின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களால் உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் 6ஆவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டம்பர் 16 முதல் பெட்ரோல் லீற்றர் 4.42 ரூபாவினாலும், அதிவேக டீசல் லீற்றர் 6.10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டு, முறையே 380.24 ரூபாவாகவும் 409.42 ரூபாவாகவும் உயர்ந்துள்ளன..

இதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் 800 சி.சி.க்கு குறைந்த வாகனங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிவாரணத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேவேளை, பிலிப்பைன்ஸிலும் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு எரிசக்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin