தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 56 பேருந்து உரிம முறைகேடு: தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளுக்காக 56 பயணிகள் சேவை உரிமங்களைச் சட்டவிரோதமான முறையில் வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்ட சேவை உரிமங்கள் விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

