ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு மீண்டும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு மீண்டும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள வழக்கை மீண்டும் எதிர்வரும் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றஞ்சாட்டப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin