கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 500 ரூபா லஞ்சம் பெற்ற ஊழியர் கைது!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 500 ரூபா லஞ்சம் பெற்ற ஊழியர் கைது!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் 500 ரூபா லஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னர் தீர்க்கப்பட்ட நிதித் தகராறு தொடர்பான வழக்கு ஒன்றின் நீதிமன்றத் தீர்ப்புப் பிரதியை வழங்குவதற்காகவே இவர் இவ்வாறு 500 ரூபா லஞ்சம் கோரிப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், நேற்று கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Recommended For You

About the Author: admin