ஸ்பெயினின் Ceuta பகுதியில் பதற்றமான சூழல்!

ஸ்பெயினின் Ceuta பகுதியில் பதற்றமான சூழல்!

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயின் கட்டுப்பாட்டுப் பகுதியான Ceuta-வில் கடற்கரைகளில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான குடியேறிகளை தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை தொடங்கியுள்ளனர்.

அதிகாலை தொடங்கிய இந்த நடவடிக்கையில், சில இடங்களில் மக்கள் கூட்டம் நெரிசலாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக Reuters தெரிவித்துள்ளது.

⚠️ நிலைமை மோசமடைந்தபோது, கலவரத் தடுப்பு போலீசார் வானத்தை நோக்கி ரப்பர் குண்டுகளை சுட்டதுடன், சிலருக்கு தடியடி நடத்தியதாகவும் Reuters கூறுகிறது.

🇪🇸 ஸ்பெயின் மதிப்பீட்டின்படி, தற்போது சுமார் 10,000 குடியேறிகள் Ceuta-வில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜூலை இறுதியில் Morocco-வில் இருந்து 72,000-க்கும் மேற்பட்டோர் Ceuta-வுக்குள் நுழைந்த மிகப்பெரிய எல்லைத் தாண்டல் சம்பவத்துக்குப் பிறகு இந்த நிலை உருவாகியுள்ளது.

🏕️ அதிகாரிகள் துறைமுகப் பகுதியில் 1,700 பேருக்கான தற்காலிக தங்குமிடத்தை அமைத்துள்ளனர். ஆனால் சில NGO-கள் இன்னும் ஆயிரக்கணக்கானோர் கடற்கரைகள் மற்றும் சாலையோரங்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கின்றன.

👦 சிறார்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

Ceuta-வில் ஏற்பட்ட இந்த குடியேற்ற நெருக்கடி அடுத்த கட்டத்தில் எப்படி மாறும்?

Recommended For You

About the Author: admin