நேபாளத்தில் இடிபாடுகளுக்கு இடையே குழந்தையை உயிருடன் மீட்ட மீட்புக் குழுவினர்!

நேபாளத்தில் இடிபாடுகளுக்கு இடையே குழந்தையை உயிருடன் மீட்ட மீட்புக் குழுவினர்!

நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, வெள்ள நீரில் சிக்கியிருந்த குழந்தையொன்று காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தையை பெண் ஒருவர் பாதுகாப்பாகத் தூக்கிச் செல்லும் நெகிழ்ச்சியான காட்சிகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பான முகாம்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளில் மீட்புக் குழுவினர் இரவும் பகலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளும் மீட்பு நடவடிக்கைகளும் அப் பகுதியில் தொய்வின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin