இலங்கையில் தீவிரமடையும் வீதிப் பாதுகாப்பு சோதனை

இலங்கையில் தீவிரமடையும் வீதிப் பாதுகாப்பு சோதனை: 252 பேரில் 7 சாரதிகள் கைது!

பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் போக்குவரத்து அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நேற்று (01) திடீர் பரிசோதனை நடத்தப்பட்டது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை பொலிஸ் இணைந்து நடத்திய இப் பரிசோதனையில் 252 பேருந்து, முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் நடமாடும் ஆய்வக பேருந்து மூலம் சோதிக்கப்பட்டனர்.

இதில் 7 சாரதிகள் ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.

விபத்துகளைக் குறைத்து பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உறுதிசெய்யும் நோக்கில் இத்திட்டம் நாடளாவிய ரீதியில் தொடரும்.

போதைப்பொருள் பயன்படுத்திய சாரதிகளுக்கு எதிராக நிறுவன ரீதியாகவும், பொதுச் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin