ஒரே ஒரு கருப்பு பெயிண்ட், ஆயிரம் பறவைகளின் உயிரைக் காப்பாற்றுது தெரியுமா?
நார்வேயில் இருக்கிற Smøla காற்றாலை பண்ணையில் விஞ்ஞானிகள் ஒரு வித்தியாசமான முயற்சி பண்ணி பார்த்தாங்க. ஒரே ஒரு காற்றாலையில் மட்டும் மூணு இறக்கையில் ஒரு இறக்கையை மட்டும் கருப்பு கலர்ல பெயிண்ட் அடிச்சாங்க. பக்கத்துல இருக்கிற மற்ற காற்றாலைகளை அப்படியே விட்டுட்டாங்க.
பல வருஷமா அங்கே விழுந்து கிடந்த பறவைகளை கணக்கெடுத்தப்போ, முடிவு எல்லோரையும் ஆச்சரியப்படுத்துச்சு. இந்த ஆய்வு Ecology and Evolution என்ற அறிவியல் இதழில் வெளிவந்தது. கருப்பு பெயிண்ட் அடிச்ச காற்றாலைகள் பக்கத்தில் பறவைகள் மோதி இறப்பது கிட்டத்தட்ட 72% வரை குறைந்திருந்தது. அதுவும் வெள்ளை வால் கழுகு ஒன்று கூட அதன் பிறகு இறக்கவில்லை.
காரணம் என்னன்னா, வெள்ளை நிற இறக்கைகள் வேகமா சுத்தும்போது பறவைகள் கண்ணுக்கு ஒரு மங்கலான வட்டமா தான் தெரியுமாம். அதனால் அதை தாண்டி போக முடியாமல் மோதிடுது. ஒரே ஒரு கருப்பு இறக்கை அந்த மங்கலை உடைச்சு, பறவைக்கு சுதாரிச்சு விலக நேரம் கொடுக்குது.
இது உண்மையிலேயே பெரிய விஷயம் என்பதால், இப்போது அமெரிக்காவில் Wyoming-ல் இருக்கும் பெரிய காற்றாலை பண்ணையில் Oregon State University இதே சோதனையை மீண்டும் செய்து வருகிறது.
ஒரு சின்ன பெயிண்ட் டப்பா ஒரு கழுகின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதே இயற்கையும் தொழில்நுட்பமும் சேரும்போது நடக்கும் அதிசயம்.

