உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்குக் கிடைத்த மாபெரும் பரிசு! 

உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்குக் கிடைத்த மாபெரும் பரிசு!

ஆபத்தான நீரில் பெண்ணைக் காப்பாற்றிய இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பாயிண்டன் இன்லெட் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக ஒரு பெண் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

அங்கு கூடியிருந்த பலரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்ற நிலையில், அதைக் கண்ட 17 வயது மாணவனான ஜாகோப் தாம்சன் எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாகக் களத்தில் இறங்கினார்.

துணிச்சலான அந்த இளம் சிறுவன் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஆபத்தான நீரில் குதித்து அந்தப் பெண்ணை நோக்கி நீந்திச் சென்றார்.

சுழன்று அடித்த நீரோட்டத்தை எதிர்த்துப் போராடி, அந்தப் பெண்ணின் உடல் சுமையைச் சமாளித்து அவளது மார்பகப் பகுதியில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாகக் கரை நோக்கி இழுத்து வரத் தொடங்கினார்.

சுமார் 200 அடிக்கும் அதிகமான தூரம் போராடி, அந்தப் பெண்ணைக் கல் சுவரின் அருகே கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அங்கு வந்த மற்றவர்களின் உதவியுடன் அந்தப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இந்தச் சோதனையான முயற்சியில் ஜாகோப்பின் கை கால்களில் லேசான காயங்கள் ஏற்பட்டாலும், அவர் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிவிட்டார்.

உயர்நிலைப் பள்ளி மாணவனான ஜாகோப்புக்குச் சிறு வயது முதலே தீயணைப்பு வீரராக வேண்டும் என்பதே மிகப்பெரிய லட்சியமாக இருந்தது. எந்தவித முறையான மீட்புப் பயிற்சி பெற்றவராக இல்லாவிட்டாலும்,

ஆபத்தில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதநேயம் மட்டுமே அவரைத் தன் உயிரைப் பணயம் வைத்துச் செயல்படத் தூண்டியது.

அவரது இந்தத் துணிச்சலான மற்றும் உன்னதமான செயல், அமெரிக்காவில் குடிமக்கள் வீரத்திற்காக வழங்கப்படும் புகழ்பெற்ற ‘கார்னகி பதக்கத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது.

மேலும், தீயணைப்புத் துறையில் சேர்ந்து தனது லட்சியத்தை அடைவதற்காக அவருக்கு முழுச் கல்வி உதவித்தொகையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல மாறாக, ஆபத்தில் தத்தளிப்பவர்களைப் பார்த்துத் தயங்காமல் களத்தில் இறங்கிச் செயல்படுவதே உண்மையான தைரியம் என்பதை இந்த இளம் சிறுவன் உலகிற்கு உணர்த்தியுள்ளான்.

Recommended For You

About the Author: admin