பாலஸ்தீன அதிகாரசபையின் ஆயுதங்களைப் பறிமுதல்

பாலஸ்தீன அதிகாரசபையின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதுடன், காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளை முழுமையாக

இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சரான இடாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) தனது பகிரங்க விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு அளித்த பேட்டியொன்றில் பேசிய அவர், பாலஸ்தீன அதிகாரசபை ஜெரிகோவில் (Jericho) பயிற்சி பெற்று வருவதைச் சுட்டிக்காட்டி

 

, “அவர்கள் போக்குவரத்தைச் சீர்செய்யப் பயிற்சி பெறவில்லை; அக்டோபர் 7 போன்ற மற்றொரு தாக்குதலை நடத்தவே திட்டமிடுகின்றனர்.

 

எனவே, அவர்களிடம் உள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலின் முழுமையான இறையாண்மையை நிறுவுவதோடு,

 

அங்கு வாழும் பாலஸ்தீனர்களை சுயவிருப்பத்தின் பேரில் வெளியேற (Voluntary Emigration) ஊக்குவிக்க வேண்டும்.

 

இஸ்ரேல் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டுமென்றால், காஸா முழுவதையும் கைப்பற்ற வேண்டும்.

 

காஸாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அகற்றி, மக்களை வெளியேற்றினால், காஸாவை ஒரு அழகான சுற்றுலாத் தலமாக (Riviera) மாற்ற முடியும்.

 

“காஸா எப்போதும் நமக்குச் சொந்தமானது. இஸ்ரேல் ஒரு சிறிய நாடு; நாம் நமது எல்லையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்” என்றும் பென்-க்விர் வலியுறுத்தியுள்ளார்.

 

பாலஸ்தீன நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவது மற்றும் மக்களைக் கட்டாயமாக வெளியேற்றுவது தொடர்பான இஸ்ரேலிய அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Recommended For You

About the Author: admin