பூனாகலை வீடமைப்பு திட்டம்: 50 குடும்பங்களின் புதிய வீடுகள் நாளை கையளிப்பு!

பூனாகலை வீடமைப்பு திட்டம்: 50 குடும்பங்களின் புதிய வீடுகள் நாளை கையளிப்பு!

பூனாகலை, கபரகலை பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் புதிய வீடுகள் நாளைய தினம் மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளன.

 

இத்திட்டத்தின் கீழ் தலா 10 பேர்ச்சஸ் காணியில், 550 சதுர அடி பரப்பளவில், இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் ஒரு வீடு சுமார் 32 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

 

புதிய வீடுகளில் குடியேறவுள்ள குடும்பங்களுக்குத் தேவையான தளபாடங்கள் உள்ளிட்ட சுமார் 175,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, தோட்டத்தொழில் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin