சிறுவர் பாதுகாப்பு விவகாரம்: $18 பில்லியன் இழப்பீடு வழங்க மெட்டா இணக்கம்!
சிறுவர்களின் உளவியல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையிலும், அவர்களை அடிமையாக்கும் வகையிலும் தளங்களை வடிவமைத்ததாக ‘மெட்டா’ (Meta) நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர 18 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க மெட்டா இணங்கியுள்ளது.
இவ்வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின்படி, இழப்பீட்டுத் தொகை வழக்குத் தொடர்ந்த மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
அத்துடன், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.
அதன்படி, சிறுவர்கள் நாளொன்றுக்கு அதிகபட்சம் 2 மணித்தியாலங்கள் மட்டுமே தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். மேலும், பெற்றோர் அனுமதியின்றி நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை தளங்களைப் பயன்படுத்தத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

