கடுமையான வறட்சியால் பிரான்ஸ் முழுவதும் நீடிக்கும் தண்ணீர் பற்றாக்குறை!!

கடுமையான வறட்சியால் பிரான்ஸ் முழுவதும் நீடிக்கும் தண்ணீர் பற்றாக்குறை!!

– கடற்கரை ஷவர்களை மூட நடவடிக்கை

பிரான்சில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் பொது ஷவர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.

 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சி நிலவரத்தைக் கட்டுப்படுத்தவும், தண்ணீரைச் சேமிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Calvados மாகாணத்தில் உள்ள Courseulles-sur-Mer மற்றும் Pas-de-Calais மாகாணத்தில் உள்ள Le Portel போன்ற கடற்கரை நகரங்கள் இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

 

எனினும், பொது சுகாதார நலன்களைக் கருத்திற்கொண்டு Antibes-Juan-les-Pins போன்ற சில நகரங்கள் ஷவர்களை மூட மறுப்புத் தெரிவித்துள்ளன.

 

பிரான்ஸ் அரசாங்கத்தின் வறட்சி மேலாண்மை முறைமையின்படி, நிலைமை நான்கு முக்கிய நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

 

விழிப்புணர்வு

 

எச்சரிக்கை

 

கடுமையான எச்சரிக்கை

 

நெருக்கடி

 

அரசாங்கத்தின் ‘VigiEau’ கண்காணிப்பு அமைப்பின்படி, ஆகஸ்ட் 26 நிலவரப்படி 79 துறைகள் Crise எனப்படும் தீவிர நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மேலும், நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறைந்துள்ளதால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,

சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin