ஜெர்மனி விமான நிலையத்தில் வெடிபொருள் ட்ரோன் – பின்னணியில் யார்?

ஜெர்மனி விமான நிலையத்தில் வெடிபொருள் ட்ரோன் – பின்னணியில் யார்?

ஜெர்மனியின் Leipzig/Halle விமான நிலையத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெடிபொருள் பொருத்தப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ட்ரோன் உக்ரைனின் Antonov சரக்கு விமானத்தை குறிவைத்திருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, மற்றொரு ட்ரோன் DHL சரக்கு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னர் விமான நிலையத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு ட்ரோனுடன் சுமார் 50 கிராம் Hexogen வெடிபொருள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இது திட்டமிட்ட தாக்குதல் முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்ய உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கலாம் என சில பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.

ஆனால் இதுவரை ஜெர்மன் அரசு ரஷ்யாவை நேரடியாக குற்றம்சாட்டவில்லை.

இந்நிலையில் ஜெர்மன் சான்சலர் Friedrich Merz, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,

விசாரணை முடிந்ததும் “விரைவில்” அவர்களை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஐரோப்பாவில் இந்த ட்ரோன் சம்பவத்தின் பின்னணி குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin