நியூசிலாந்தில் அசத்தும் இலங்கை இளைஞர்!

6 வயதில் கண்ட கனவு இன்று நனவானது – நியூசிலாந்தில் அசத்தும் இலங்கை இளைஞர்!

இலங்கையில் பிறந்து வளர்ந்த 26 வயது இளைஞரான ரோஷென் மெண்டிஸ், தற்போது நியூசிலாந்து ராணுவ விமானப்படையில் விமானியாக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தனது சிறு வயதில் அதாவது தனது ஆறாவது வயதில் வானில் பறந்த பிரம்மாண்டமான விமானத்தைக் கண்டபோதே, தனக்குள் விமானியாகும் ஆர்வம் தொற்றிக் கொண்டதாக ரோஷென் பெருமிதத்துடன் கூறுகிறார்.

 

அவரது தாய்க்கு நியூசிலாந்தில் வேலைவாய்ப்பு கிடைத்ததை அடுத்து, ரோஷென் தன் தாயுடன் இணைந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

 

பாடசாலைபருவத்திலேயே விமானியாக வேண்டும் என்ற தனது கனவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய அவர், தனது 17-வது வயதிலேயே ‘டோமஹாக்’ ரக விமானத்தைத் தனியாக இயக்கும் வாய்ப்பைப் பெற்று அனைவரையும் வியக்க வைத்தார்.

 

ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் நான்காண்டு காலப் பொறியியல் பட்டப் படிப்பை முடித்த அவர், பிரபல பிஷர் & பாய்கெல் அப்ளையன்சஸ் நிறுவனத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

 

கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்து விமானப்படையின் விமானி பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது T-6C டெக்சன் II விமானத்தை இயக்கிப் பயிற்சி பெற்று வருவதுடன், விரைவில் சி-130ஜே ஹெர்குலஸ் விமானத்தை இயக்கவும் காத்திருக்கிறார்.

Recommended For You

About the Author: admin