பிரான்சில் மருத்துவக் கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்!
பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron கையெழுத்திட்ட ‘மருத்துவ உதவியுடன் இறப்பு’ (Aide à mourir) சட்டம் ஆகஸ்ட் 19 அன்று Journal officiel-ல் வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக சட்டமாகியுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட, பிரான்ஸ் குடிமகன் அல்லது அங்கு நிரந்தரமாக வசிப்பவர்,
குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத உடல் அல்லது மன வேதனையை எதிர்கொண்டு,
தனது முடிவை சுதந்திரமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கக்கூடியவர்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் இந்த உரிமை வழங்கப்படும்.
நோயாளி தானாகவே மருந்தை எடுத்துக்கொள்வதே நடைமுறையாக இருக்கும்;
அதைச் செய்ய உடல்ரீதியாக முடியாத சூழலில் மட்டும் மருத்துவர் அல்லது செவிலியர் உதவ முடியும்.
மேலும், சட்டம் வெளியிடப்பட்டாலும் நடைமுறை முழுமையாகத் தொடங்குவதற்கு தேவையான விதிமுறைகள் இன்னும் அமல்படுத்தப்பட வேண்டும்.
இது பிரான்சின் இறுதிக்கட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான சட்டத்தில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆதரவாளர்கள் நோயாளியின் இறுதி முடிவெடுக்கும் உரிமையை வலியுறுத்துகின்றனர்;
எதிர்ப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

