அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.2,500 மில்லியன் மதிப்பில் கட்டப்படும் பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இலங்கை அரசு மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி பங்களிப்பில் 2022-இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், இடைநிறுத்தப்பட்டு 2025-இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பணிகளை நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கடந்த 08-ஆம் திகதி ஆய்வு செய்தார்.
பேருந்து மற்றும் ரயில் சேவைகளை ஒருங்கிணைத்து, ‘Touch & Go’ வசதியுடன் நாட்டின் பல பகுதிகளுக்குமான பயணங்களை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.
அனைத்து நவீன வசதிகளுடனும் கூடிய இநிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

