உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பிரெஞ்சு பாஸ்போர்ட் பாதுகாப்பு குறியீட்டில் பின்தங்கியிருந்தாலும் குறையாத பலம் – உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் 4ஆம் இடத்தை பிடித்த பிரான்ஸ்!
உலகளாவிய பாதுகாப்புத் தரவரிசையில் பிரான்ஸ் பின்தங்கியிருந்தாலும், அதன் கடவுச்சீட்டு உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஒன்றாகத் தொடர்ந்து திகழ்கிறது.
புகழ்பெற்ற ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசையின்படி, பிரான்ஸ் கடவுச்சீட்டு உலகளவில் நான்காவது இடத்தை வகிக்கிறது.
முன்கூட்டியே விசா பெறாமல் அல்லது வருகையின்போது விசா பெறும் வசதியுடன் பிரெஞ்சு குடிமக்கள் 185 நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும்.
குறியீடுகளின்படி, உலகளாவிய அமைதிக் குறியீட்டில் 163 நாடுகளில் பிரான்ஸ் 99-வது இடத்தையே பெற்றுள்ளது.
குற்றங்கள், பயங்கரவாதம், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் இராணுவமயமாக்கல் போன்ற காரணிகளால் இந்தத் தாழ்வான தரவரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரான்ஸின் பெரிய இராணுவம் மற்றும் ஆப்பிரிக்காவின் முன்னாள் காலனித்துவப் பகுதிகளில் படைகளைக் குவித்துள்ளமை போன்ற காரணங்களால் இராணுவமயமாக்கல் பிரிவில் மிகக் குறைந்த புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மேலும், அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய யூனியனின் ஒரே நாடாக இருப்பதும் அணுக்கழிவு அபாய மதிப்பீட்டைப் பாதிக்கிறது.
எனினும், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் கடந்த காலத் தாக்குதல்கள் இருந்தபோதிலும், குறைந்த கொலை விகிதங்கள்,
அண்டை நாடுகளுடன் நல்லுறவு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அகதிகளுக்கான சிறந்த பாதுகாப்பு போன்ற காரணிகளால் அன்றாட வாழ்க்கைக்கான பாதுகாப்பு அம்சங்களில் பிரான்ஸ் உயர் இடத்திலேயே உள்ளது.

