நுவரெலியாவில் சீரற்ற காலநிலை: 2,331 பேர் பாதிப்பு – 6 பேர் காணாமல் போனதாக மாவட்ட செயலாளர் தகவல்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (03) மாலை 4.00 மணி வரையான நிலவரப்படி, நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்டத்தில் இதுவரை 06 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில், கினிகஹேன மொரஹேன கிராமப் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 04 பேர் காணாமல் போயுள்ளதுடன், அம்பகமுவ பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 02 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

