மண்ணுக்குள் புதையுண்ட நால்வரில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு
ஹட்டன் பொல்பிட்டிய, மொரஹெனகம பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போயுள்ளனர்.
இன்று (03) இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன ஏனையவர்களைத் தேடும் தீவிர மீட்புப் பணிகளில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


