2025 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள எந்தவொரு ஜனாதிபதி மாளிகையிலும் ஜனாதிபதி தங்கியிருக்கவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொழும்பு, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டை ஆகிய 7 ஜனாதிபதி மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியிருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாளிகைகளின் பராமரிப்பு, மின்சாரம் மற்றும் தொலைபேசிச் செலவுகளுக்காக ரூ.32.9 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை மாளிகைகளில் கூட்டங்கள் நடைபெறாத நிலையிலும், அவற்றிற்காக மட்டும் ரூ.2.4 மில்லியனுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகத்தின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

