கனடாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது மொரோக்கோ!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் Round of 16 சுற்று ஆட்டத்தில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி கால்பந்து வரலாற்றில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
டெக்சாஸின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால் 0-0 என சமநிலை நீடித்தது.
எனினும், இரு தரப்பிலும் கடுமையான ஆட்டமும் தற்காப்பும் வெளிப்பட்டது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மொரோக்கோ அணி முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியது.
மொரோக்கோ அணியின் அசெடின் ஔனாஹி (Azzedine Ounahi) முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனையடுத்து 81ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை அபாரமாகச் செயல்பட்ட அசெடின் ஔனாஹி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்து கனடா அணிக்கு நெருக்கடியைக் கூட்டினார்.
பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் சுஃபியான் ரஹிமி (Soufiane Rahimi) மொரோக்கோ அணியின் மூன்றாவது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கனடா அணி பல கோல் வாய்ப்புகளை உருவாக்க முயன்ற போதிலும், மொரோக்கோவின் பலமான தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை.
இந்த வெற்றியை அடுத்து மொரோக்கோ அணி உலகக் கிண்ணக் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது

Recommended For You

About the Author: admin