சுற்றுலாத் துறையை மேம்படுத்த பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்குவதில் கவனம்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் பயணிகள் ட்ரோன் சேவையைத் தொடங்குவது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

சீகிரியா, பிதுரங்கல மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற சுற்றுலாப் பகுதிகளில் இந்த சேவையை பயன்படுத்துவது குறித்தும், துறைமுக நகரில் முன்மாதிரி செயற்பாட்டு வலயத்தை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ட்ரோன் மூலம் ஒரு பயணத்திற்கு US$20–30 வரை செலவாகலாம் என EHang நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசர அனர்த்த சேவைகள் மற்றும் கடல்சார் தேவைகளுக்கும் இந்த சேவையை பயன்படுத்தும் சாத்தியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin