பழைய வளத்தாப்பிட்டி, காளி கோயில் வீதியைச் சேர்ந்த [57வயது உடைய ] மயில்வாகனம் என்பவர், இன்று [03]திகதி சட்டுமுன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள, ஆள் நடமாட்டம் குறைவான வளவு ஒன்றிலேயே குறித்த நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பாக, நாளை காலை மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

