மூதூரில் அதிகாலை பஸ் விபத்து – வீடு சேதம், சாரதி காயம்!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கதிர்காமத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்போ அல்லது பொதுமக்களுக்கு காயமோ ஏற்படவில்லை.

சிறிய காயமடைந்த பஸ் சாரதி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin