மூதூர், ஜூலை 10 – மூதூர் பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களின் ஆசிரியர்களுக்கான டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்பள்ளி வளாகங்களின் உள்ளக மற்றும் வெளிப்புற சூழலை டெங்கு நுளம்புகள் பெருகாத வகையில் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், டெங்கு பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையின் அவசியம் குறித்தும் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம். கஸ்ஸாலி, வலயக் கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி இணைப்பாளர் பீ. எம்.எம். றவ்வூப், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எம். றினோஸ், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எப். சஸ்னா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என். சிபாதா பானு, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எம். ஷாபி ஆகியோருடன், மூதூர் பிரதேச முன்பள்ளி அபிவிருத்தி நிலைய ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்


