மொனாக்கோ பார்சல் குண்டுவெடிப்பு: ஆண் வேடமிட்டு தப்பியதாக சந்தேகம்!

மொனாக்கோவில் உக்ரைனில் பிறந்த தொழிலதிபர் வாடிம் இயெர்மோலாயேவ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக காயப்படுத்திய பார்சல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி, இந்த தாக்குதலின் முக்கிய சந்தேகநபர் 39 வயதான உக்ரைன் பெண் அனஸ்தாசியா பெரெசோவ்ஸ்கா. அவர் தற்போது ஜெர்மனியில் வசித்து வந்ததாகவும், ஆண் வேடமிட்டு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல் (Interpol), அவரை கைது செய்ய உலக நாடுகளுக்கு ‘ரெட் நோட்டீஸ்’ (Red Notice) வெளியிட்டுள்ளது. அதிகாரிகள் அவரை ஜெர்மன் மொழி பேசக்கூடியவர் என்றும், வலது கையில் பாம்பு வடிவ பச்சைக் குத்து இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் பின்னணி மற்றும் தாக்குதலின் நோக்கம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Recommended For You

About the Author: admin